தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள காமராஜ் கல்லூாி மற்றும் பள்ளி எதிாில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கல்லூாி மாணவிகளுடன் திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், பகுதி செயலாளர் மேகநாதன், கவுன்சிலா்கள் ராமகிருஷ்ணன், வைதேகி, முத்துமாாி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ்இளம்பாிதி, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, ரெக்ஸ், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், ரஜினிமுருகன், முன்னாள் கவுன்சிலா் பாலன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், காமராஜ் கல்லூாி பேராசிாியா் தேவராஜ், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.