கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை சார்பில் திருக்குறள் வார விழா கொண்டாடப்படுகிறது.
திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த வார விழாவின், முதல் நாளில், முனைவர் சுஜா சுயம்பு, பேராசிரியர் தாய் ராசி ஜெகதீஸ்வரன், நந்தனம் கலைக்கல்லூரி மேனாள் தமிழ் துறை பேராசிரியர் பழனிவேல் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு, திருக்குறள் பற்றிய பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் விஜயா, தமிழ் துறை தலைவர் சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர் நினைவு நாளான நாளை திருக்குறள் பற்றிய கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.