போச்சம்பள்ளி, ஜன.9:
காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஆவத்துவாடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை யில், குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ.3 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை, முழு கரும்பு ஆகியவற்றை திமுக மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் நாகபூசனம், ஒன்றிய அவைத் தலைவர் இராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தட்ரஅள்ளி ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆவத்துவாடி கி.முரளி,தாபா பாஸ்கர்,அருள், ஜெயசீலன், கதிர்வேல், சுறா, ஜேகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….