கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு தெற்கு திமுக ஒன்றியத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம் எல் ஏ ஆலோசனின் படி, திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா மாபெரும் ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட், கைபந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள், மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குண. வசந்தரசு தலைமையில், மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே. ஆர்.கே. நரசிம்மன் வரவேற்புரையில், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் கமலநாதன், அறிவழகன், மாவட்ட பிரதிநிதி சாந்த மூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் லலிதா ரவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கதிர்வேல், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமி பெருமாள்,பால் மூர்த்தி, மோகன் குமார், சிவா ஆகியோர் முன்னிலையில், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டியும், அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் கைப்பந்து போட்டியையும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கபடி போட்டியும் நடைபெற்றது. போட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *