தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 50 தம்பதியினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது

இன்றைய அவசர யுகத்தில் 60 வயதுக்கு மேல் வாழ்வது போனஸ் நாட்கள் எனலாம் அதிலும் கணவன் மனைவி இருவருமே உடல் ஆரோக்கியத்துடன் 70 வயதுக்கு மேல் வாழ்வது பாராட்டத்தக்கது 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதியினர் 50 ஜோடிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி கே.கே.பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு சார்பில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் ஷிபாயா தலைமை தாங்கினார் சித்தா டாக்டர் சிராஜுதீன் அனைவரையும் வரவேற்றார் திருச்சியில் காமய கவுண்டன்பட்டி சுருளிப்பட்டி நாராயணதேவன்பட்டி ஆகிய ஊர்களின் சேர்ந்த 50 ஜோடி தம்பதிகள் கலந்து கொண்டனர் அவர்களின் சிலர் மேடையில் தங்களின் உடல் நலம் பராமரிப்பு தங்களின் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார்கள் அளவான உணவு நடை பயிற்சி டீ காபி தவிர்த்தல் சரியான நேரத்தில் தூங்கச் செல்லுதல் எந்த விஷயத்திற்கும் பதட்டப்படாமல் இருப்பது டிவி அலைபேசிகளை தவிர்ப்பது என அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை விளக்கிப் பேசினார்கள்.

கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான நாலந்தா இன்னோவேஷன் பள்ளி தாளாளர் வி.கே.ஜி. விஸ்வநாதன் இத்த ம்பதியினரை கவுரவிக்கும் வகையில் 50 ஜோடிகளுக்கும் தன்னுடைய சொந்த பணத்தில் அன்பளிப்பு பரிசு பொருள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் முதியோருக்கு தேவையான மருதம்பட்டை சூரணம் வல்லாரை சங்கு பற்ப மற்றும் சூங்கிலிய மாத்திரைகள் தைலங்கள் அடங்கிய மருந்து பெட்டகங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் கொடையாளர்கள் லிங்கேஸ்வரன் கர்ணன் நாலந்தா பள்ளி துணை முதல்வர் மலர்விழி பள்ளி மேலாளர் விஎல் விக்னேஷ் கவுன்சிலர் சேப்பியார் டாக்டர் சிவ இளங்கோ உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *