பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ராஜகிரி- பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கம் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட ராஜகிரி- பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ராஜகிரி- பண்டாரவாடை நடிகர் சங்கத் தலைவர் முகம்மது அமீர் தலைமை வகித்தார் பொருளாளர் சித்திக் பாட்ஷா முன்னிலை வகித்தார் செயலாளர் அப்துல் காதர் வரவேற்று பேசினார்.
விழாவில் மாவட்ட தலைவர் எம்.என். துரை. கலந்து கொண்டு சங்க கொடியினை ஏற்றி வைத்து புதிய சங்கத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாவட்ட செயலாளர் தியாக . சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் டாரத்திசெல்வராஜ், மாவட்ட துணை தலைவர் தாமரைச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளர் பன்னீர் என்கிற அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ,அய்யம்பேட்டை மதகடி பஜார் வணிகர் சங்கத்தலைவர் ராமலிங்கம், பாபநாசம் வணிகர் சங்க செயலாளர் கோவிந்தராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள் விழாவில் மாவட்ட நிர்வாகிகளும்,வணிகர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முடிவில் வணிகர் சங்க துணை செயலாளர் காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.