தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நகரின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க சிரமமின்றி பள்ளிக்கு செல்ல விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் வழங்கினார்
உடன் வடக்கு நகரச் செயலாளர் எம்.சி. வீரபாண்டியன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரா.பாண்டியன் தலைமை செயற்குழு உறுப்பினர் நகர் மன்ற உறுப்பினர் குரு குமரன் உள்பட நகர திமுக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.