கோவை வாசவி வித்யாலயா நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பாக வாசவி வைபவ் எனும் தலைப்பில் பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வாசவி மித்ரா மகால் அரங்கில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தலைவர் அசோகன் ராம்தாஸ் தலைமை தாங்கினார்.
செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பெல்லம் ரங்கநாதன்,சேர்மன் சுரபி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்த கலை நிகழ்ச்சிகள்,நடனம், நாடகம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் பன் முக திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து கடந்த ஆண்டு கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.