புழல் அருகே சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வது ஆண்டு விழா நடைபெற்றது .

இதில் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் பால் ரங்கநாதன் , சிறப்பு அழைப்பாளராக உலக பைபிள் பள்ளியின் தலைவர் ப்ரெயின் ரெக்ஸ் டேவிஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம் ,மென்பொருள், இயற்பியல் ,வேதியல் போன்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ் கேடயங்கள் வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை அடுத்து இந்த விழாவில் மாணவ மாணவியர்களுக்கு கல்வியின் அவசியம் பற்றியும் ஒழுக்கத்துடன் கல்வியை கற்று தேர்ச்சி பெற்று அதிலிருந்து உயர்கல்வி பயில வேண்டுமென உலக பைபிள் பள்ளியின் தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, இறுதியாக பள்ளியில் முதல்வர் மேக்லி உரையின் போது பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் பல துறைகளில் ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளியில் அனைத்து பொதுப்பாடம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு அறிவுத்திறன் சாய்ந்த பாடங்களில் முன்னேற்றம் காண வகுப்புகள் நடைபெற்று அதில் மாநில அளவில் போல பரிசுகளை குவித்து வருவதையும் குறிப்பிட்டார் .

மேலும் பள்ளியில் வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தார் இதில் இளம் சிறார்கள் முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் ஆடல் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சி நாடகங்கள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது இதில் பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள்களும் ஏராளமான மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுரசித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *