உதகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான பைக் ரேசர்கள் கலந்து கொள்ளும் டர்ட் அண்ட் பைக் ரேஸ் சேற்றில் இருசக்கர வாகனம் ஓட்டும் போட்டியை திமுகாவின் கிழக்கு நகர செயலாளர் ஜார்ஜ்
துவக்கி வைத்தார்

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மற்றும் உதகை நகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், மாணவர் அணி சார்பில், உதகை அரசு கலைக்கல்லூரியில் தேசிய அளவிலான பைக் ரேசர்கள் கலந்து கொள்ளும் டர்ட் அன்ட் பைக் ரேஸ் எனப்படும் சேற்றில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் போட்டிகள் நடந்தது.

இப்போட்டிகளை உதகை கிழக்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வசித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடந்தது. இறுதியாக இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் நீலகிரி எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *