கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, கானொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள ஆவின் பால் நிறுவனத்தில் புதிய நுண்ணுயிரியியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார்


கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள ஆவின் பால் நிறுவனத்தில் புதிய நுண்ணுயிரியியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. முன்னிலை வகித்தார்.


பால் வளத்துறையின் சார்பில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆவின் பால் நிறுவனத்தில் ரூ.47.05 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நுண்ணுயிரியியல் ஆய்வக கட்டிடம் மற்றும் பால் மற்றும் பால் உபபொருட்கள் பரிசோதனை உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

பால் நுண்ணியிரியல் ஆய்வகத்தில் பாலின் தரம்,பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள நுண்ணுயிரிகளை ஆராயப்படும்.பொது மக்கள் பருகக்கூடிய பாலில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும், தீமை செய்யும் கிருமிகளும் இருக்க வாய்ப்புள்ளதால், அதனை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். மேலும், பால் கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்பதை அறிய சில அடிப்படை சோதனைகள் செய்யப்படுகின்றன.

​பாலில் நோயை உண்டாக்கும் கிருமிகள் உள்ளனவா என்பது குறித்தும் சோதிக்கப்படும்.பால் உபபொருட்களான தயிர்,சீஸ் மற்றும் யோகர்ட் தயாரிக்கும் போது அவற்றுக்குத் தேவையான லாக்டோ பேசிலஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் தூய்மை மற்றும் வீரியம் குறித்து சோதிக்கப்படும்.
இந்த ஆய்வகத்தில் இன்குபேட்டர், ஆட்டோகிளேவ், மைக்ரோஸ்கோப், லேமினார் ஏர் ப்ளோ உள்ளிட்ட முக்கிய கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.இதனைத் தொடர்ந்து,சிறந்த செயற்கை முறை கரூவூட்டல் செய்த 5 பணியாளர்களுக்கும் மற்றும் 9 சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. வழங்கினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவகுறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட துணைப்பதிவாளர் (பால்வளம்) இரா.தே.பவணந்தி, பொது மேலாளர்
வு.பிரவீனா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *