தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மகிழ்ந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது அதில் கல்லூரியில் பயிலும்
300-க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு உறியடித்தல், கோலப்போட்டி ,கும்மியாட்டம்,பாலூன் ஊதுதல் போட்டி, உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.இதில் அனைத்து மாணவிகளும் உற்சாகமாக கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் அனைத்து மாணவிகளும் கலந்து கொண்டு சினிமா பாடல்களுக்கு ஏற்ற வகையில் உற்சாகமாக நடனம் ஆடினர் இதைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடனமாடிய மாணவிகளுக்கும் ,அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.