திருச்சி காந்தி மார்க்கெட் அருகே நேற்று அரசு பேருந்து ஒன்றில் கண்டக்டராக தஞ்சாவூர் செங்கிப்பட்டியைச் சேர்ந்த ராஜா பணியில் இருந்தார். படிக்கட்டில் நின்றிருந்த அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் ஹரி பிரசாத் ஆகியோரை பேருந்துக்குள் வருமாறு அவர் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இருவரும் கண்டக்டரை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர் .
மண்னை
க.மாரிமுத்து.