கோவை இராமநாதபுரம் நாகப்பன் வீதியில் மாற்றம் கிளப் சார்பாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்..
இந்நிலையில் கோவை இராமநாதபுரம் பகுதியில் இளைஞர்கள் இணைந்து நடத்தி வரும் மாற்றம் கிளப் எனும் சமூக நல்லிணக்க அமைப்பினர் இணைந்து நாகப்பன் வீதியில் பொங்கல் விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்..
முன்னதாக காலையில் மாற்றம் கிளப் தலைவர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்த பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது..
இதில் 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி முருகன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்..
இதில் அந்த பகுதியில் வசித்து வரும் அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்..
சிறுவர்,சிறுமிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்காக ஓட்டப்பந்தயம்,மியூசிக்கல் சேர்,ஸ்லோ சைக்கிள்,உரி அடித்தல்,உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்,சிறுமிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் அப்பாஸ்,வழக்கறிஞர் மனோகரன்,காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன்,பத்திர எழுத்தாளர் ஈஸ்வரன்,,பிரிமியர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
விழாவிற்கான ஏற்பாடுகளை மாற்றம் கிளப் நிர்வாகிகள் ரமேஷ் குமார்
வசந்தகுமார் பிரகாஷ் முருகேசன் குமரேசன் மகேந்திரன் கதிரவன் சரவணன் கார்த்திக் மனோஜ் ஷாம் அமீன் பிரபு நரேந்திர பிரசாத் நவீன் சஞ்சய் அகிலன் மோனிஷ் தர்ஷன் தினேஷ் ப்ரீத்தீவு அப்சல் விக்கி புவன் தினேஷ் கீர்த்தி ஆதில் கௌதம் நித்திஷ் ,ஹரி,பிரதீப்,விஷ்ணு,ஜெய்சன்,அபிஷேக்,ஹர்சத்,ஜகன்,கவுசிக் மற்றும் மகளிர் அணியினர் கல்பனா விதா ராஜேஸ்வரி உமா மகேஸ்வரி சுகுணா கலைசெல்வி ஹரி பிரியா வினிதா பவித்ரா உமா முரளி பவித்ரா சத்யா ஷானு நந்தினி சுரேகா நிவேதா
ஸ்வேதா ஸ்நேகா ஆகியோர் செய்திருந்தனர்..