செங்குன்றம் செய்தியாளர்

கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பாக பெரவள்ளூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

சென்னை பெரவள்ளூரில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் சென்னை கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இவ்விழாவில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு பொங்கலிட்டு விழாவை சிறப்பித்தார்

மேலும் காவல்துறை குடும்பத்தினர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் கோலப்போட்டி, லெமன்ஸ்பூன், சாக்கு பை ஓட்டம் , என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் கோலப் போட்டிகள் கொளத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தின் சார்பாகவும் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர் .

இவ்விழாவில் கொளத்தூர் காவல் சரக உதவி ஆணையாளர் செந்தில்குமார் புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சத்யன், வில்லிவாக்கம் காவல் சரக உதவி ஆணையாளர் சிதம்பர முருகேசன் காவல் நிலைய ஆய்வாளர்கள் கண்ணகி ,சரவணன் ,பெருந்துறை முருகன் , ராஜகோபால், கோபிநாத்,லோகநாதன், கலைச்செல்வி , பரணி, தன்ராஜ் ,பிரஜித் தீபா, பெமிலா மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பெண் காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *