பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்….

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றிய திமுக பேரூர் அலுவலகத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

விழாவில் பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமை வகித்தார்.

மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு இயக்கத்தில் இருந்து பிரிந்து 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட
பிரதிநிதி அறிவழகன்,வக்கீல் வெற்றிச்செல்வன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அனிபா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, புஷ்பா சக்திவேல், கீர்த்திவாசன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *