பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் செல்லப்பா என்கிற ராஜ்முஹமது
வயது -42,
வழக்கம்போல் செல்போன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் அதிகாலையில் கடையை திறப்பதற்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைரேகை நிபுணர் கார்த்திக் திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்து சோதனைகளில் ஈடுபட்டார்..
தஞ்சை -கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள செல்போன் கடையில் நடந்த திருட்டு சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது..