டேக்சி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான ஓகே பாஸ் (okboz) எனும் சூப்பர் செயலியின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

வணிக சேவைகளுக்கென புதிய (Load Express) லோட் எக்ஸ்பிரஸ் எனும் லாஜிஸ்டிக் சேவை அறிமுகம்

போக்குவரத்து,உணவு,மளிகை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் என 50 க்கும் மேற்பட்ட சேவை வசதிகள் கொண்ட ஓகே பாஸ் (OKBOZ) செயலி கோவையில் கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது…

கோவையில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவங்கிய ஓகே பாஸ் செயலி,வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவுடன் ஒரு வருடத்தில் சுமார் 70,000 வாடிக்கையாளர்களை கொண்டு 1500 கார்களுடன் செயல்பட்டு ஓகே பாஸ் நிறுவனம் தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது…

உணவு,போக்குவரத்து,அத்தியாவசிய வீட்டு தேவைகள் என அனைத்து வசதகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் விதமாக தற்போது சேலம்,திருச்சி,மதுரை போன்ற இடங்களிலும் தனது சேவையை விரவு படுத்தி உள்ளனர்..

ஓகேபாஸ் செயலி நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு வெற்றி விழா ராமநாதபுரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது..

இதில் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் மற்றும் நிறுவனர் செந்தில். குமார் மற்றும் பிசினெஸ் டெவலப்மெண்ட் மேனேஜர் பிரதீப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..

பல்வேறு சேவைகளை ஒரே செயலியில் வழங்கி வரும் ஓகே பாஸ் செயலிக்கு தற்போது பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தை யொட்டி பல்வேறு அதிரடி ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்…

மேலும் தற்போது ஓகே பாஸ் செயலியில் லோட் எக்ஸ்பிரஸ் எனும் புதிய சேவையை இணைத்துள்ளதாக கூறிய அவர்,இதன் வாயிலாக வணிக தேவைகளுக்கென லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்…

மேலும் தற்போது, ஃபிராஞ்சைஸ் மாடல் மூலம் மேலும் பல இரண்டாம் கட்ட நகரங்களுக்கு சேவை விரிவுபடுத்தப்பட்டு, உள்ளூர் தொழில்முனைவோர்களுக்கும் வருமான வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *