மதுரையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் ‘தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள், எனும் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினையும்அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி துவங்கியது.

தமிழினத்தின் தொன்மை வரலாற்றை அறிவியல் தரவுகளுடன் உலகிற்குத் துல்லியமாக எடுத்துரைக்க இக்கருத்தரங்கம் வழிவகுக்கும். மேலும், அறிவியலின் துணை கொண்டு நம் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பதுடன், வரலாறு மற்றும் சமூக அறிவியல் குறித்த முக்கிய ஆய்வுகளுக்கு வழிகோலும் வகையில், அண்மைக்காலமாகதமிழ்நாட்டில் நடந்து வரும் அறிவியல் ரீதியான அகழாய்வுகள் குறித்தும், இக் கருத்தரங்கம் நடைபெற்றது..

மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், ஓய்வு பெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் & சிந்து வெளி ஆய்வு மைய மதிப்புறு ஆலோசகர் முனைவர் ஆர். பாலகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், தமிழ்நாடு தொல்லியல்துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன், தொல்லியல்துறை இணை இயக்குநர் முனைவர் சிவானந்தம் ஆகியோருடன் தொல்லியல் அறிஞர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *