கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெண் களுக்கு எதிரான வன்முறை தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஆடிட்டோரிய வளாகத்தில் women cell சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரேணுகா முன்னிலையில் நடைபெற்றது

உத்தமபாளையம் உத்தமபாளையம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்தன மாரி சமூக நல அலுவலர் வேளாங்கண்ணி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உடல் மனம் பாலியல் உடல் தொடர்பான வன்முறை மற்றும் பொருளாதார வன்முறை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி பேசினார்கள் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்துத் துறை சார்ந்த மாணவிகளும் பங்கேற்று விழிப்புணர்வு அடைந்து பயன் பெற்றனர். உயர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் பி. பொற்கொடி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *