கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 93 வதுஆண்டுவிழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 93 ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் தலைவர் முஜிப் ரஹ்மான் மற்றும் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,
பள்ளி தாளாளர் சிராஜுதீன் தலைமைவகித்தார், ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹமீது நிசா வரவேற்புரை நிகழ்த்தினார், விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக,ஜாஃபிர் சுலைமான் தாளாளர், அல்பய்யினா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்,
வெள்ளதுரை முதல்வர் வட்டார கல்வி பயிற்சி பள்ளி மஞ்சூர், காவல் ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் ஆண்டுவிழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், பிரபாகர்,தேன்மொழி வட்டாரக் கல்விஅலுவலர் ,மல்லிகா, சேதுபதி வட்டார வளமைய மேற்பார்வையாளர், (பொ), வாழ்த்துரை வழங்கினார்கள்,
இந்நிகழ்வில் பள்ளி மாணவமாணவிகளின் வண்ணமிகு அணிவகுப்பு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி, குறிப்பாக ராம்ப் வாக், கராத்தே, சிலம்பம், ஆகியவை மாணவ மாணவிகள் நிகழ்த்தி காட்டினார், இதில் ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.