தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை வந்தார்..

அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்ற அவர் அங்கு வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், கூட்டணி பற்றி மாநில தலைவர் அறிவிப்பார், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நான் நிற்கவில்லை, என்னிடம் பயணிக்கும் சகோதரருக்கு வாய்ப்பு வாங்கி தருவேன். கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்பேன். உறுதி எடுத்துக் கொண்டு இருக்கின்றேன். பாஜக மதவாத கட்சி என்று திமுக பிரச்சாரம் செய்கிறது.. ஆனால் திமுக சிறுபான்மையினர் நலனுக்காக, அவர்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது என்று திமுக கூறவேண்டும்.

காஷ்மீரில் நடந்த பிரச்சனைக்கு பிரதமர் போக வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை… ஆனால் இதனை நீங்கள் விஜயிடம் கேட்டிருக்க வேண்டும்.

திமுக விற்கும் விஜய்க்கும் தான் போட்டியா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு? அவருக்கு எழுதிக் கொடுத்ததை அவர் கூறியிருக்கின்றார்..

திமுக எம் எல் ஏ தளபதி காங்கிரஸ் பற்றி பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை என்று கூறியுள்ளார்., இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? திமுக கூட்டணி பிரச்சனை இது குறித்து நான் ஒன்னும் கருத்து கூற முடியாது.

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாதது எனது விருப்பம் நான் சுயநலமாக சிந்திக்கவில்லை உடன் பயணிப்பவர்கள் போட்டியிட வேண்டும் என்று நினைக்கின்றேன்.

சரத்குமார் கட்சி ஆரம்பிக்கும் போது வலுவான கூட்டம் வந்தது. அதேபோன்றுதான் விஜய்க்கும் இருக்கிறது. இது குறித்த கேள்விக்கு? என்னையும், விஜயையும் சம்பந்த படுத்த வேண்டாம்.. 28 ஆண்டுகள் எனக்கு அனுபவம் இருக்கிறது. எம்பி எம்எல்ஏ நின்று இருக்கின்றேன் என்னுடன் ஒப்பிட வேண்டாம்.. அஜித் போனாலும் கூட்டம் வர தான் செய்யும். ரஜினி போனாலும் கூட்டம் வர தான் செய்யும், கூட்டம் வரும் ஆனால் வாக்களிப்பார்களா என்று மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

ராதிகா சரத்குமார் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற செய்தியாளர் கேள்விக்கு? நானே போட்டியிடவில்லை அவர் எப்படி போட்டியிடுவார் என்றார்.

பேட்டி: சரத்குமார், பாஜக நிர்வாகி மற்றும் நடிகர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *