மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதி களில் 27 லட்சத்து 40 40 ஆயிர ஆயிரத்து 631 வாக்காளர்கள் கடந்த இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற் றுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளபடி வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.) மதுரையில் “தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக மதுரை சட்டமன்ற 10 தொகுதிகளில் நேற்று மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் கணக்கெடுப்பு படி வம் வீடுவீடாக வழங்கும் பணிகள் தொடங்கின.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய் ஹிந்த்புரம் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தபணி தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுக ளுக்கு சென்று வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியினை கலெக் டர் பிரவீன்குமார் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இந்த பணியில் 2,752 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். நேற்று முதல் அடுத்த மாதம் 4ந்தேதி வரை வரை. அவர்கள் வீடு வீடாக ஒவ்வொரு வீட்டிற் கும் 3 முறை சென்று கணக் கெடுக்க உள்ளனர். இதுகு றித்த உதவி மையத்தை அணுக 1950 என்ற எண் அறி விக்கப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்கிறது. பெயர்களை சேர்த்தல் மற் றும் மறுப்பு தெரிவித்தல் டிசம்பர் 9-ந்தேதியில் இருந்து ஜனவரி 31-ந்தேதி வரை அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 8-ந் 8-ந்தேதி வரை நடக்கிறது. அறிவிப்பு காலம் (விசா ரணை மற்றும் சரிபார்த்தல்) நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந் தேதி வெளியி டப்படுகிறது.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத் திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்பார்வையா ளர்கள் அலுவலரான வடக்கு தாசில்தார் பாண்டி தலைமையில் வாக்குச்சா வடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் நேரடியாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கினர். இது தொடர்பாக தொடர்ந்து பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *