குறிஞ்சிப்பாடி வட்டம்,
வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.2025 அன்று யாவே கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை,சார்பில் மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்பட்டது. ஒலிம்பியாட் தேர்வுகள் என்பது மாணவர்களின் கணிதம், அறிவியல், கணினி மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களில் உள்ள திறன்களை சோதிப்பதற்கான போட்டித்தேர்வுகள் ஆகும். இந்த தேர்வில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது, இந்ததேர்வில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வினை எழுதினார்கள். அறக்கட்டளை சார்பாக வந்திருந்த குழுவினர் தேர்வினை கண்காணித்தனர். இதில் மாவட்ட அளவில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் சான்றுகளும் சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டது. இது குறித்து, மாணவர்களின் ஆர்வத்தினையும் , திறனையும் காண்பதால், மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளியின் முதல்வர் சுகிர்தா தாமஸ் மற்றும் நிர்வாக அதிகாரி தீபக் தாமஸ் ஆகியோர்களிடம், தேர்வுக் குழுவினர் பாராட்டினார்கள்.
இத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள், பெற்ற மாணவிக்கு பள்ளி முதல்வர் சுகிர்த்தா தாமஸ் மற்றும் பள்ளி நிர்வாக அதிகாரி தீபக் தாமஸ் ஆகியோர்,கேடயமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்கள்.