தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முப்பிலி பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையிலும் கண்மாயில் சோலார் நிறுவனத்திற்கு மின்கம்பம் நடப்படுவதால் விவசாய முற்றிலும் பாதிக்கப்படும் ஆடு மாடு மேய்ச்சல் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என அந்த கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்

மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று முப்பிலி பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் வீடு தோறும் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது அதுபோல புதியபுத்தூர். ஓட்டப்பிடாரம் சாலையிலும் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது இதனை அடுத்து ஒன்று திரண்ட கிராம மக்கள் சாலையில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொதுமக்கள் கூறுகையில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா அவருடைய சகோதரர் முருகேச பாண்டியன் ஓட்டப்பிடாத சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமத்திலும் எங்களுடைய முப்பளிப்பட்டி கிராமத்தில் அதிக மின்சாரம் செல்லக்கூடிய உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது

மாவட்ட நிர்வாகம் சோலார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது ஊர் பொதுமக்கள் விவசாயிகள் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மின்கம்பம் நடப்படுகிறது நாங்கள் அதனை தடுத்து நிறுத்த கோரி பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் சூழ்நிலை உள்ளது இதற்கு துணையாக ஓட்டப்பிடாத சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவருடைய சகோதரரும் செயல்படுகிறார்

விவசாய நிலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிராமம் முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டு கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் அருகில் உள்ள விவசாய நிலத்தை விவசாயம் செய்வதற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது அதனால் உள்ளே உள்ள இடத்திற்கு விவசாய நிலத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது

இந்த ஆண்டு அதனால் நாங்கள் விவசாயம் செய்யவில்லை. ஊரில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருகிறார் எம்எல்ஏ சண்முகையா. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட விட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முழுவதும் புறக்கணிப்போம் எங்கள் ஊர் முழுவதும் அடையாள அட்டை ஆதார் கார்டு வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் என்று முப்பிலி பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி உறுதி மொழி எடுத்துள்ளனர்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடனடியாக இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *