தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு துவக்க விழா-துறையூரில் தவெகவினர் அன்னதானம் வழங்கினர்

துறையூர் பிப்-02
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் அண்ணா சிலை அருகில் துறையூர் நகரம்,ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.

சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில்தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து துறையூரில்2/2/2026அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் மாவட்ட இணை செயலாளர் மதன் மற்றும் நகர செயலாளர்கள் வினோத், சூர்யா, கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா,தெற்கு ஒன்றிய செயலாளர் என் சுதாகர்,மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் குணா,மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தொகுதி பொறுப்பாளர் கவியரசன் சதாசிவம் நாகராஜ் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான “விசில்”ஐ தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி விசில் அடித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றியடைந்து தவெக தலைவர் விஜயை தமிழகத்தின் முதல்வராக்க கழகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியுடன் பாடுபட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *