தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப் பட்ட படிப்பகம் (Reading Room) திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரியகுளம் நகர்மன்ற தலைவர், சுமிதா சிவக்குமார், நகராட்சி நகர் மன்ற வார்டு கவுன்சிலர்கள் சுதா நாகலிங்கம், மதன்குமார் திமுக வழக்கறி ஞர் சிவக்குமார் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் ப.நாகரத்தினம், தொழிலாளர் விடுதலை முன்னனி தொல். தளபதி, சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் ஆண்டவர், தாரிக், ரூபன் தேவா, ஒப்பந்ததாரர் மஞ்சுரி தர்மராஜன் உள்ளிட்டோரை பத்திரிகையாளர் கார்த்திக் குடும்பத்தார் வரவேற்று பொன்னாடை போர்த்தி புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினர்.

மேலும் அப்பகுதி மக்கள் படித்து பயன் பெறும் வகையில் பொது அறிவு, அறிஞர்கள், தலைவர்கள், சித்த மருத்துவம், தத்துவங்கள், சுயமரியாதை நூல்கள், நாவல்கள், கவிதை புத்தங்கள் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தங்களை தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் புரவலர் கா.சிவானி கார்த்திக் இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சி நிறைவில் திமுக வழக்கறிஞர் சிவக்குமார் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *