தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 7.11 கோடி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார்

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரியில் ரூபாய் 1.44 மதீப்பிட்டில் 2,. பல்நோக்கு அரங்குகள் கட்டுமான பணிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் கல்லூரி முதல்வர் முனைவர் வசந்த நாயகி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் கண்ணன் காளி ராமசாமி தேனி வடக்கு மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட கல்லூரியில் இருபால் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *