தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு கால பூஜை வழிபாடு நடைபெற்றது.முதல் கால பூஜை இரவு10 மணி இரண்டாம் கால பூஜை இரவு 12 மணி மூன்றாம் கால பூஜை இரவு 2மணி நான்காம் கால பூஜை பிரம்ம முகூர்த்தம் பூஜை 4 நான்கு மணியளவில் துவங்கி அதிகாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
முதல் காலம் சிறப்பு அபிஷேகம் பூஜையில் முன்னால் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரிசனம் செய்து வழிபட்டார் மகாசிவராத்திரி இந்த இனிய சிவராத்திரியில், விடிய, விடிய, கூட்டு வழிபாட்டுடன் தேவாரம், திருவாசகம், கூட்டு வழிபாட்டுடன் பாடி இறைவனை போற்றி பக்தர்கள் வழிபட்டார்கள் உலக நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது
ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணியளவில் அன்னதானத்தையும், ஒவ்வொரு கால பூஜைகள் முடிந்தவுடன் அன்ன பிரசாதத்தையும் தேனி அரசு ஒப்பந்தகாரர் M.வீரராஜ் தாமாரை குளம் முன்னால் சேர்மன் M.ராம தண்டபாணியும் வழங்கினார்கள்
குழுவின் சார்பாக ஐந்து முகம் ருத்ராட்சம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்கள் செய்திருந்தனர்