திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், செட்டிக் குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தேவக்குமார் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், புலவர் ந.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பரிதா பேகம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
தாய்மொழி கல்வியே வாழ்க்கையின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்று வலியுறுத்தினார். மேலும் இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர் அன்பு, முன்னாள் கவுன்சிலர் பாண்டுரங்கன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் தரணி, கணினி ஆசிரியர் சுரேஷ், இயக்குநர் அருள் முருகன், குறும்பட உதவி இயக்குநர் முகமது ஜியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மேலும் தாய்மொழி தின சிறப்பு உரையரங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.