ராஜதுரை இ மொபைலிங் நிறுவனம் சார்பாக துவங்கப்பட்ட புதிய கிளையில் திறப்பு விழாவை முன்னிட்டு சலுகைகள் வழங்க உள்ளதாக நிர்வாகிகள் தகவல்

புதிய வாகனங்களை வாங்குவதில் தற்போது பலர் எலக்ட்ரானிக் டூவீலர் மீதான ஆர்வம் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

இதனால் இ வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் கோவையில் புதிய ரிவர் இரு சக்கர வாகன விற்பனை துவங்கப்பட்டது..

ராஜ துரை இ மொபைலிங் நிறுவனம் சார்பாக கோவை சத்தி சாலையி்ல் துவங்கப்பட்டுள்ள புதிய ஷோரூம் துவக்க விழாவில், நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஸ்வினி,
சேர்மன் சுந்தரேசன் மற்றும் ரிவர் நிறுவனத்தின் டீலர் டெவலப்பர் ஹெட் ரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு கிளையை திறந்து வைத்தனர்.

குறைந்த மின் செலவில், அதிக மைலேஜ் தரும் டூவீலர்களை வாங்குவதில், பொதுமக்கள் ஆர்வமாக உள்ள நிலையில்,ரிவர் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ‘ஸ்டைல்’ மற்றும் ‘மைலேஜ்’ அடிப்படையில் ரிவர் ஸ்கூட்டர் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தனர்…

புதிய ஷோரூம் விற்பனை மற்றும் சேவை வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய கிளை மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடனடி டெஸ்ட் ரைடு வசதி, விரைவான சர்வீஸ் வழங்கப்பட இருப்பதாகவும்,
மேலும், திறப்பு விழாவை முன்னிட்டு நேரில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகள், முன்பதிவு சலுகைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் 120 முதல், 130 கி.மீ.வரை மைலேஜ் கிடைக்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *