கும்பகோணம்: குடந்தை மகாசக்தி அறக்கட்டளை,குடந்தை மகாசக்தி லயன்ஸ் மற்றும் லியோ சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து சிட்டி யூனியன் பேங்க் நிதி உதவியுடன் இலவச உடல் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்
கம்பட்ட விஸ்வநாதர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாமன்ற உறுப்பினர் முருகன் துவக்கி வைத்தார். .சிறப்பு அழைப்பாளராக தாராசுரம் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் ,கிளை வளர்ச்சி மேலாளர், என். வேதா வினோத் கலந்து கொண்டார்.குடந்தை மகாசக்தி அறக்கட்டளை தலைவர் லயன் மீனா செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் லயன் செல்வ மகேஸ்வரி, லயன் பொருளாளர் லயன் கலைச்செல்வி
இயக்குனர்கள் லயன் கலைவாணி,லயன் வசந்தா ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீனாட்சி மருத்துவமனை மருத்துவா் குருநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில்
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி சளி, இருதய நோய் கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.

இதில் சங்கத் தலைவர் லயன் ரஜினி பாய், செயலாளர் லயன் சுகன்யா, பொருளாளர் லயன் தேன்மொழி,வட்டாரத் தலைவர் லயன் சுபா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *