லயன்ஸ் கிளப் எண்டர்பிரெனர் (Lions Club Of Entrepreneur)சார்பாக நடைபெற்ற லயன்ஸ் சுழல் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி

லயன்ஸ் 3242 சி மாவட்ட மண்டல நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டம் சார்பாக உறுப்பினர்களின் நலன் கருதி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..

இதன் தொடர்ச்சியாக லயன்ஸ் 3242 சி மாவட்டம், எண்டர்பிரெனர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக லயன்ஸ் சுழல் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் போட்டி கோவை கொடிசியா பின்புறம் உள்ள என் ஆர் ஐ மைதானத்தில் நடைபெற்றது..

லயன்ஸ் மாவட்ட விளையாட்டுத்துறை தலைவர் முகேஷ் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் ,மாவட்ட கிரிக்கெட் தலைவர் வனம்பிரபு, மாவட்டத் தலைவர் மகிழ்ச்சிகனகராஜ், வட்டார தலைவர் அருண்குமார் சங்கத்தின் தலைவர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் ராஜசேகர் முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் பழனிச்சாமி கருணாநிதி ராம்குமார் மற்றும் முதலாம் துணை ஆளுநர் செல்வராஜ் இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால்
ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்
ஜி எஸ் டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..

ஒரு நாள் தொடராக எட்டு ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற்ற இதில்,
லயன்ஸ் 3242 சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து மண்டலங்கள் பங்கு பெற்றன..

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில்,காவேரி மண்டல தலைவர் வல்புர் சாமி அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று லயன்ஸ் மாவட்ட சுழற் கோப்பையை வென்றது இதே போல இரண்டாவது பரிசை மகாநதி மண்டலத் தலைவர் ரமேஷ் குமார் அணி பெற்றது..

தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவித்தனர்..

போட்டிகளில் சிறந்த மட்டை வீச்சாளராக பொள்ளாச்சி ப்ரைடு லயன் சங்கத்தின் பூபதி,சிறந்த பந்து வீச்சாளராக சஜின் சிறப்பு தடுப்பாளராக பிரபு குமார் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பராக மாறன் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில்,மாவட்ட பிஆர்ஓ வெங்கடகிருஷ்ணன்,பசிப்பிணி போக்குதல் தலைவர் கர்ணன்,வட்டாரத் தலைவர் ராமநாதன் ,வட்டாரத் தலைவர் செந்தில் பிரபு ,இமயம் சங்கத்தின் நக்கீரன் வெங்கடேஷ் நேரு நகர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *