கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
விரைவில் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ந்து கட்சி பணிகளை தீவிரபடுத்த கட்சி அலுவலகங்களை ஆங்காங்கே திறந்து வருகின்றனர்..
இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் த.வெ.க.கட்சி அலுவலக திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
சரவணம்பட்டி பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்…
நிகழ்ச்சியில் பேசிய அவர்,வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று,தளபதி விஜய் தலைமையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என உறுதி கூறினார்..
கட்சி பணியில் தொடர்ந்து ஈடுபடும் த.வெ.க.பகுதி நிர்வாகிகள் உறுப்பனர்கள் சேர்க்கையை தீவிரபடுத்த வேண்டும் என்றார் தொடர்ந்து விழாவில் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,பேனா போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது..
நிகழ்ச்சியில் த.வெ.க.மாநில மாவட்ட நிர்வாகிகள் ஜெயஸ்ரீ, சத்தியமூர்த்தி, மது, சதீஷ் மற்றும் விவேக் கோபி ராஜேஷ் வினோத் ரவிச்சந்திரன் மணி பிரசன்னா பூபதி ரமேஷ் ஜெய்ஹிந்த் உதயா கார்த்தி கிருஷ்ணா விக்னேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்