பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ கோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்….
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாயா,ஓம் நமசிவாய என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர் தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே மதகரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது..
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன..
தொடர்ந்து மேள, தாளங்களுடன் சிவாசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு ஸ்ரீ கோபதிலிங்கேஸ்வரர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மதகரம் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.