வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கம் சார்பாக, நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற தலைவர், செயலாளர்,மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம், சங்கத்தின் செயல் தலைவர் S, முத்தையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் ஆயுள்கால ஆற்றல்மிகு செயலாளர் R, குழந்தைவேலு அவர்கள் பயனடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்,ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்,பாரம்பரியம் பல கண்ட திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் வரலாற்று சிறப்பாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற தலைவர்
திருCA, பாலு, பொதுச் செயலாளர் திரு C, குமரேசன்,மற்றும் ER S, ஜோதி பாஸ்கரன்,
A, விஜயானந்தம்,K, மகேஷ்,VDRV, தியாகராஜன்,S, ரவிச்சந்திரன்,
MM, முகம்மது உசேன், ஆகியோர்,பயனடை மற்றும் நினைவு பரிசுகளை
ஏற்றுக்கொண்டு ஏற்புரை வழங்கினார்கள், முன்னதாக சங்க துணை தலைவர் V,செந்தில் குமார் வரவேற்புரை யாற்றினார் துணைச்செயலாளர் P, செல்வராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்,