பொதக்குடியில் காணமல் போன மகனை மீட்டு தர தமிழக முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை…

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடி பதுரியா தெருவை சேர்ந்தவர் பஹ்ரூதின் , ஹலீமா நாச்சியா ஆகியோரின் மகன் முகமது அப்சர்தீன் (20) கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நோன்பு தொழுகை முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது அவரது தாய் ஹலிமா நாச்சியாரிடம் கடை தெருவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளதாகவும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு மகன் என திரும்பவில்லை பதறி போன தாய் அவரது உறவினர் வீட்டிற்கு போன் செய்து தன் மகன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டுள்ளார்.
உறவினர்கள் எல்லோரும் தனது வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மகனை காணவில்லை என உறவினர்களை அழைத்து சென்று கூத்தாநல்லூர் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து முகமது அப்சர்தீன் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மகனின் தாய் 20 ஆண்டுகள் பாதுகாத்த என் மகன் எங்கே போனான் என்று தெரியவில்லை. காணாமல் போன மகனை பிரிந்து என்னால் வாழ முடியாது எனவே தமிழக முதல்வர் என் மகனை மீட்டு தர வேண்டும் என மகனின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.