எஸ்.டி.பி.ஐ. மகளிர் அணி சார்பாக கோவையில் ,நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இதில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பெண்கள் பங்கேற்பு
எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது..
இதன் ஒரு பகுதியாக ,எஸ்.டி.பி.ஐ.மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் தனியார் திருமண மண்டப அரங்கில் நடைபெற்றது…
மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜன்னத்துல் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,துணை தலைவர் சல்மா அனைவரையும் வரவேற்று பேசினார்..
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் முஸ்தபா,மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன்,முகமது இஷாக்,ரகூப் நிஸ்தார்,சாகுல் ஹமீது,அப்துல் கரீம்,இப்ராஹீம் பாதுஷா,சிவக்குமார்,அப்துல் ரஹீம்,உமர் செரீப் , அபுத்தாஹிர், ஹனீப்கான், மன்சூர் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர்கள் அலிமா ராஜா உசேன்,காயத்ரி,தமிழ் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் வனிதா,பெரியார் திராவிடர் கழக லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மகளிர் அணி மாநில தலைவர் பாத்திமா கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்..
அப்போது பேசிய அவர், பெண்கள் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறிய அவர்,பெண்கள் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல் அதிகாரத்தில் இருப்பவர்களாக பெண்கள் மாற வேண்டும் என தெரிவித்தார்..
தொடர்ந்து நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில. பொது செயலாளர் அஹமது நவவி,பேசுகையில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக கூறினார்..
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நோன்பாளிகள் மற்றும் விருந்தினர்களுக்கு பேரீச்சம்பழம்,ஜூஸ்,நோன்பு கஞ்சி மற்றும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது…