கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாணவர்கள் மாநில அளவிலான பென் காக் சிலாட் பீச் கேம்ஸில் தங்க பதக்கங்கள் வெற்று சாதனை..

கரூர் தமிழ்நாடு பென் காக் சிலாட் அசோசியேஷன் சார்பில் 4வது மாநில அளவிலான பென் காக் சிலாட் பீச் கேம்ஸ் போட்டி, கடலூர் மாவட்டம் சில்வர் பீச் பகுதியில் மாநிலச் செயலாளர் G.P.மகேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

ந்த போட்டியில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இருந்து சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பென் காக் சிலாட் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, 39 பேர் பதக்கங்கள் வென்று சிறப்பிடம் பெற்றனர்.

பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் பதக்கம் மற்றும் பொன்னாடை அணிவித்தும் கௌரவித்தனர்.மேலும் இம்மாணவர்கள் அனைவரும் கரூரில் செயல்பட்டு வரும் கிச்சா மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு உருவாக்கித் தந்த மாநிலச் செயலாளர் ஜி.பி. மகேஷ்பாபு-க்கு கரூர் மாவட்ட பென் காக் சிலாட் சார்பில் நன்றியும்,பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் மாவட்டச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சாதனைக்குத் துணைநின்ற பயிற்சியாளர் எம். வீரா (எ) வீரமணி மற்றும் பெற்றோர்களை பாராட்டினார்.

பென் காக் சிலாட் விளையாட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அங்கீகரித்த விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற உள்ள “அஸ்மிதா கேலோ இந்தியா” விளையாட்டு போட்டிகளில் கரூர் மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *