தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா பேரணி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள என் சி பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரா சாரணிய சங்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா பேரணி நேற்று நடைபெற்றது.
உலக சாரண இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவல் பிறந்தநாளை முன்னிட்டு உலக நூற்றாண்டு சிந்தனை நாள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை சின்னக்காம்பாளையம் அரசு தலைமை ஆசிரியரும் தாராபுரம் மாவட்ட சாரண செயலர் பெரியசாமி தலைமையில் வரவேற்று பேசினர். தாராபுரம் டிஎஸ்பி சிவக்குமார் வாழ்த்துரை வழங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் விவேகம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து தாராபுரம் தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் அருள்ஜோதி சாரா சாரணியரின் முக்கியத்துவம் பற்றி விளக்கினர். பொருளாளர் செந்தில் நன்றியுரை வழங்கினார்.
இந்த பேரணியானது பொள்ளாச்சி சாலையில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூக்கடை கார்னர் அண்ணா சிலை தாலுகா அலுவலகம் வழியாக 5 சாலை சந்திப்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் தாராபுரம் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 23 பள்ளிகளை சேர்ந்த 260 சாரணர்களும் 230 சாரணியர்களும் கலந்து கொண்டனர்.