செங்குன்றம் செய்தியாளர்

செங்குன்றம், புள்ளிலையன் ஊராட்சி, புதுநகர் , ஆரூண் உல்லாச நகரில் புதிய டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

நடுநிலைப்பள்ளி மற்றும் தொழில் செய்பவர்கள் ,வியாபாரிகள் ,பெண்கள் நடமாடக்கூடிய பகுதி என்பதால் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோஷமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நீங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது எனவும் இதனை முறைப்படி நீங்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தாருக்கும் மனு அளித்து அரசு அதற்கு என்ன முடிவு எடுத்து அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *