ஆலங்குடி.,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே ஆலங்குடி பகுதியில் ‌ அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், திருமாவளவன் இவர்களுடைய ஏற்பாட்டில் ஆலங்குடி, பூனாயிருப்பு, தென் குவலவேலி ஊராட்சி பகுதியிலிருந்து.

திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து. பெண்கள் இளைஞர்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர். திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்த தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அதிமுக சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், மற்றும் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பொறுப்பாளர்கள், சார்பு அணிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *