தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக மீன் சந்தை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் முழுமை அடையாத நிலையில், தற்போதே கடைகள் டெண்டர் விடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வைப்பு தொகையாக மூன்று லட்சமும் – வாடகை 15,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மீனவர்கள் எதிர்பார்த்த அடிப்படை வசதிகள் எதுவும் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டி இன்று மீன் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உடனடியாக மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் இல்லையென்றால் மீன் சந்தைகளை காலவரை இன்றி மூடி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.