செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர் அருகே மாடு ஓட்டிச் சென்ற முதியவர் பேருந்து மோதி பலி. தாலுகா போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.
திருவாரூர் அருகே சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 61 இவர் இன்று காலை தனது மாட்டை ஓட்டி மேய்ச்சலுக்காக சாலையை கடந்த போது திருத்துறைப்பண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாடு ஓட்டிச் சென்ற முதியவர் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.