கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர் பொன் கணேசன், அம்மா பேரவை நகரச்செயலாளர் செந்தில் பாலு ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு சுமார் 78 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், எஸ்.கே.எஸ்.பாலு, எம்.ஆர்.எஸ்.மோகன், சசிக்குமார், சண்முகம், கருமலை சௌந்தரராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
24.02.2026