முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பாகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர் சென்ற மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து ஒரு பகுதி தனது கண்ணை இழந்தார்.
இதற்கு முத்துப்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் சிங்காரவடிவேல் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டு படுகாயம் அடைந்த ஹரிகரன் மீதே பொய் வழக்கு பதிவு செய்த சம்பவத்தை கண்டித்தும்,
அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், தொடர்ச்சியாக ஜாதி ரீதியாகவும், அனுமதியின்றி செயல்படும் டாஸ்மார்க் பார்களுக்கும், கஞ்சா மற்றும் கட்ட பஞ்சாயத்து காரர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையை கண்டித்தும்
இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அங்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்ட போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.