எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மகளிருக்கு ரூ.1000 கொடுக்க முடியது என்று கூறிய பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார்- மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்வி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பானு சேகர் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் இருந்து காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் கட்சி துண்டு அனிவித்து வரவேற்றார்.
பின்னர் மயிலடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா செய்தியாளர்களை சந்தித்தபோது
வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சி சார்பில் அறிவிகப்படும் வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு அயராது பாடுபடுவது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல்காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்திய தேசய விவசாயிகளின் உரிமையை அமெரிக்காவிடம் விற்றது குறித்தும், இந்திய எல்லைகளை சைனா ஆக்கிரமிப்பு செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ராகுல்காந்தி பேச வாய்ப்பு கேட்டபோது மறுக்கப்பட்டது.
காந்தியை நேசிப்பவர்கள் நாங்கள் அகிம்சை முறையில்தான் போராடினோம். ஆனால் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை தாக்க முற்பட்டதாக முற்றிலுமான பொய்யான தகவல். நாடாளுமன்ற அவையில் உள்ள சிசிடிவி பதிவுகளை மக்களிடம் கொடுத்தால் உண்மை தெரியும்.
விவசாய உற்பத்தி பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளனர். இறக்குமதிக்கு வரிவிதிக்கப்படவில்லை. இந்திய பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் அமெரிக்காவிற்கு எதற்கு பிரதமர் ஆதரவு அளிக்கிறார். விளைவித்த பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படும் நிலையில் உள்ளது.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்கம் வகையில் காந்தியின் பெயரை மாற்றியுள்ளனர். பெயர் மாற்றத்தால் விவசாயிகள் பயன்பெறப்போகிறார்களா என்றால் இல்லை. நூறுநாள் வேலையை முழுவதுமாக கொடுப்பதில்லை 125 என்பது கொடுக்க மாட்டார்கள். 2014ம் ஆண்டுக்கு பிறக நூறுநாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்துவிட்டார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
கூட்டணி குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் வருவது நம்ப வேண்டியதில்லை. கூட்டணி, எத்தனை தொகுதி என்பது குறித்து தமிழக தலைமை, தேசிய தலைமைதான் முடிவு செய்யும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
அதிமுகவை பாஜக கபலிகரம் செய்துவிட்டது. அதிமுக தோழர்களை நினைத்து நாங்கள் கவலை படுகிறோம்.
ஏஐ மாநாட்டில் தவறான செயல்கள் நடந்தது. சைனா தயாரித்த ரோபோட் போன்றவை நமது நாட்டில் தயாரித்ததாக காட்டியது மிகப்பெரிய தவறு. நமது நாட்டில் என்னென்ன தயாரித்து இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
எந்த ஒரு கட்சிக்கும் போராடுவதற்கு அடிப்படை உரிமை இருக்கிறது அதனை ஜனநாயக முறைப்படி நாங்கள் போராடினோம்.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியது என்று கூறிய அதிமுக எடபாடி பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார் என கேள்வி.