திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
திருவாரூர் தெற்கு வீதி பகுதியில் முதல்வர் மருந்தகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் குறைவான விலையில் தரமான மருந்து என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த வருடம் மருந்தாளர் பட்டம் படித்த இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு ஆயிரம் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது .
இம் மருந்தகம் வழியாக 75 சதவீத மானியத்தில் மருந்துகள் சலுகை விலையில் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று திருவாரூர் தெற்குவீதியில் நமது முதல்வர் மருந்தக உரிமையாளர் அறிவொளி என்பவரது கடையில் இந்த மருந்தகத்தின் மூலம் திருவாரூர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இதை தொடர்ச்சியாக இன்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த துவக்க விழாவில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சத்து மாத்திரைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் இந்த இலவச பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது உடலினை பரிசோதனை செய்து கொண்டனர்.