தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் தீவிர தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படாத நிலையிலும் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதன்படி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின் பேரில் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி தலைமையில் மகளிர் அணி திமுகவினர் வீரபாண்டியில் அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பெண்களிடம் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்த விளக்கி கூறியும் தமிழ் பெண்கள் வெல்லட்டும் என்ற புத்தகங்கள் வழங்கி தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் தேனி ஒன்றிய மகளிர் அணி திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *