தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் எம் பி கலந்து கொண்டு தாராபுரம் தொகுதி குறைகள் கேப்பு .
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் கலந்துகொண்டு தாராபுரம் தொகுதி முக்கிய பிரமுகர்களிடம் தாராபுரம் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார் இதில் பேசிய முக்கிய பிரமுகர்கள் தாராபுரத்தில் மீன் மார்க்கெட் மற்றும் நீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வேண்டும் மேலும் உப்பார் அணையில் பாசனம் செய்வதற்கு திருமூர்த்தி மலையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் போன்ற கோரிக்கை வைத்தனர்
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் தேர்தல் என்பதால் அனைத்தும் முதலிடம் கூறி நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார் அதை தொடர்ந்து பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அமராவதி ஆற்றில் இருந்தும் தண்ணீரை திறப்பதற்கு தனி கால்வாய் அமைத்து தண்ணீர் தாராபுரத்திற்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாாறு அணை தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார் கேரளா அமைச்சர் மற்றும் முதல்வரிடம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மற்ற நதியில் இருந்தும் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் பேசி முல்லைப் பெரியாறு மற்றும் நல்லாரு போன்ற பகுதியில் இருந்து தண்ணீரைப் பெற்று வருகிறோம் தொடர்ந்து அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
பிறகு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தமிழ்நாடு தலைகுனியாது இதுபோன்ற முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்களை வைத்து 19 ஆவது தொகுதியாக தாராபுரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது தாராபுரம் அடிப்படை வசதிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் தேவையான வசதிகள் சாலை வசதிகள் முஸ்லிம் அமைப்புகளின் ஜமாத் வசதிகள்குறித்தும் சாலை வசதிகள் விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட வகை கேட்கப்பட்டது இந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார்கள் இந்த கோரிக்கை அனைத்தையும் பதிவு செய்து முதல்வர் இடத்தில் கொண்டு சேர்த்து தேர்தல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார் உப்பாறு அணையில் இரந்து கடைக்கோடி விவசாயிகளுக்கு தண்ணீர் பற்று குறை ஏற்பட்டுள்ளது அதை சரி செய்ய விவசாயிகள் கேட்டுள்ளனர் அதையும் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார் .
கூட்டணி கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து அது கேள்விக்கு தலைமை கழகத்தில் எடுத்துரைப்பார்கள் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள் என்று முடித்துவிட்டார் மேலும் விஜய் பற்றி கேட்பதற்கு தேர்தல் வாக்கு என்னும் வரை அவர்கள் வந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறிக் கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்தார் இந்த தொழில் முனைவோர் கூட்டத்திற்கு திருப்பூர் நான்காம் மண்டல குழு தலைவர் பத்மநாபன் தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம் நகராட்சி தலைவர் பாபு கண்ணன் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.